andhima-digital-memorials-loader
poster-photo
IN MEMORY OF

Mr. Kaduvetti Guru

25-May-2018 | Ariyalur, Tamil Nadu, India

வன்னியர் சங்கத்தலைவரும், பாமகவின் முன்னணி தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான காடுவெட்டி ஜெ.குரு ( 57) காலமானார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சிகிச்சைபெற்று வந்தார். கடந்த சில நாட்களாக மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிக்சிசை பெற்று வந்தார்.  இந்நிலையில் இன்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தில் பிறந்த குரு, பாமக சார்பில் 2முறை எம்.எல்.ஏவாக இருந்துள்ளார்.

பாமக நிறுவனர் Dr.ராமதாஸ்: 

நான் பெற்றெடுக்காத எனது மூத்த பிள்ளையும், வன்னியர் சங்கத்தின் தலைவருமான குரு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியை கண்ணீருடன் பகிர்ந்து கொள்கிறேன். எனது வாழ்வில் எத்தனையோ இழப்புகளை நான் எதிர்கொண்டு இருக்கிறேன். அவை அத்தனையையும் தாண்டிய பெருஞ்சோகம் குருவின் மறைவு தான் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்,

சமூக நீதிப் போராட்டத்தில் எனக்கு துணை நின்ற தளபதிகளில் முக்கியமானவர் குரு. அவரிடம் ஒரு பணியை ஒப்படைத்தால் அதை செய்து விட்டு தான் அடுத்த பணிக்கு செய்வார். எனக்கு அறிமுகமான நாளில் இருந்து கடைசி மூச்சு விடும் நாள் வரை எனது நம்பிக்கைக்குரிய தளபதியாக திகழ்ந்தவர் குரு.

குருவுக்கும், எனக்கும் இடையிலான உறவு அரசியல் கட்சி நிறுவனருக்கும், தொண்டருக்கும் இடையிலானதாக ஒருபோதும் இருந்ததில்லை; மாறாக பாசமுள்ள தந்தைக்கும் விசுவாசமுள்ள மகனுக்கும் இடையிலான உன்னதமான உறவாகவே இருந்தது.

குருவின் செயல்பாடுகள் குறித்து எனக்கு எப்போதுமே பெருமிதம் உண்டு. அரியலூர் மாவட்டத்தில் இரட்டைக்குவளை முறையை ஒழித்ததில் தொடங்கி என்னை அழைத்துச் சென்று ஒரே நாளில் 7 இடங்களில் அம்பேத்கர் சிலைகளை திறக்க வைத்தது, அப்பகுதி மக்களுக்கு எந்த சிக்கல் ஏற்பட்டாலும் உடனடியாக களமிறங்கி போராடுவது என பல்வேறு சாதனைகளுக்கு குரு சொந்தக்காரர் ஆவார்.

அவரது பெருமைகளை வெறும் வார்த்தைகளால் வர்ணித்துவிட முடியாது. அதற்கான தெம்பும், மனநிலையும் எனக்கு இல்லை. நான் கண்ணீரில் நனைந்து கொண்டிருக்கிறேன்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், வன்னியர் சங்கத்தினர் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் கட்டுப்படுத்த முடியாத கண்ணீருடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


Created By - Velvili

Guest book

  • guest
    Sabari Rajan 28-May-2018

    Rip #KGuru

  • guest
    Sathya 28-May-2018

  • guest
    G.kandavel 28-May-2018

    Good morning

  • guest
    Anbazhagan K 28-May-2018

  • guest
    Mahesh Kashyap 03/05/1996 28-May-2018

    Hi

  • guest
    Mukesh paswan 28-May-2018

  • guest
    Thirumaran 28-May-2018

    RIP

  • guest
    Subburaj 28-May-2018

    Ooooo

  • guest
    vijayrolaniya 28-May-2018

    Hiii

  • guest
    Gnanavel 26-May-2018

    RIP

  • guest
    Lakshmipriya 25-May-2018

    RIP

  • guest
    Vijay 25-May-2018

    Rest In Peace

  • guest
    Rajendiran 25-May-2018

Light-a-candle Sabari Rajan on 29-May-2018
Light-a-candle Sabari Rajan on 29-May-2018
Light-a-candle K kubendran on 29-May-2018
Light-a-candle Smanat on 29-May-2018
Light-a-candle Anbazhagan K on 28-May-2018
Light-a-candle Kishore on 28-May-2018
Light-a-candle KANDIGAI.N.GOPAL on 28-May-2018
Light-a-candle velu on 28-May-2018
Light-a-candle G DILIPKUMAR on 28-May-2018
Light-a-candle Vanan on 28-May-2018
Light-a-candle Subburaj on 28-May-2018
Light-a-candle A.S.Jahangir on 28-May-2018
Light-a-candle xyz on 28-May-2018
Light-a-candle Rip on 28-May-2018
Light-a-candle Gnanavel on 27-May-2018
Light-a-candle Sakthi on 26-May-2018
Light-a-candle Venkatesh on 26-May-2018
Light-a-candle Kannan on 26-May-2018
Light-a-candle Lakshmipriya on 26-May-2018
Light-a-candle Vijay on 26-May-2018
Light-a-candle Rajendiran on 26-May-2018

Ritual Information