andhima-digital-memorials-loader

Digital Memorials

Recent Obituaries

andhima-Obituary

Prof. M Lee Thangappa

31-May-2018

மொழி பெயர்ப்பிலும்  மொழி ஆக்கத்திலும் வல்லவரான தமிழறிஞர் ம.இலெ.தங்கப்பா இன்று (மே 31,2018)வைகறைக்கு முன்னரே –  நேற்று  இரவு 01.30 மணிக்கு – இயற்கை எய்தினார். நலக்குறைவால் சில நாள் முன்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் நேற்று  முதல் நாள் வீடு திரும்பினார்.  ஆனால்,  மூச்சுத் திணறலால்  காலமானார்.   ‘வானகம்,  எண் 7, 11 ஆவது குறுக்குத் தெரு,  ஒளவை நகர், புதுச்சேரி- 8′  இல் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்குப் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கண்தானமும் உடற்கொடையும் அளித்துள்ளமையால் அவரது உடல் இன்றுமாலை 4.00 மணிக்குச்   சமேமஆநி (சவகர்லால் பட்டமேற்படிப்பு மருத்துவக்கல்வி-ஆராய்ச்சி நிறுவனத்திற்கு – JIPMER -) க்கு அளிக்கப்படுகிறது. இவர் தனித்தமிழ்ப் பற்றாளர். புதுச்சேரி அரசு கலைக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் முத்திரை பதித்தவர் தங்கப்பா. இவரது ’ஆந்தைப்பாட்டு’ மிக முக்கியமான பகடி இலக்கியமாகும்.பென்குயின் பதிப்பக வெளியீடாக வந்துள்ள ‘LOVE STANDS A LONE' என்னும் மொழிபெயர்ப்பு நூல், சங்க இலக்கியப் பாடல்களின் ஆங்கில பெயர்ப்பாகும். அவர் எழுதியுள்ள நூல்களில் இயற்கை ஆற்றுப்படை, எது வாழ்க்கை?, கொடுத்தலே வாழ்க்கை ஆகியவையும் மிகவும் குறிப்பிடத்தக்கவை.குழந்தை இலக்கியத்திற்கான சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றுள்ளார் தஙகப்பா. வேலூர் இலக்கியப் பேரவை வழங்கும் வாழ்நாள் சாதனைக்கான விருதையும் தங்கப்பா பெற்றுள்ளார். அவருக்கு தமிழறிஞர்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர்....

andhima-Obituary

Mr. Muktha Srinivasan

29-May-2018

V. Srinivasan was born in Malapuram on 31st October 1929 in a Tamil Brahmin family.His parents were Venkatachariar and Chellamma. He followed all Brahmin rituals sincerely through out his life. He remained a vegetarian. He expired on 29 May 2018 in his residence in T.Nagar, Chennai due to old age. He is survived by his wife and children. He is director, producer and screenplay. He directed his first film mudhalali in 1957 which was produced by Ratna Studios.  He introduced several people to the industry, including Vaali as lyricist, and Visu as filmmaker (with Keezh Vaanam Sivakkum). Srinivasan also collaborated with his close friend Sivaji Ganesan in films like Andaman Kadhali, Imayam and Iru Medhaigal. He directed Kamal Hasan in Andharangam and Simla Special, and Rajnikanth in Polladhavan. Of his 43 directorial ventures, 29 were box office hits. The film Andha Naal, in which he assisted s.balachandar, was the first film without songs that was made in Madras. Srinivasan was one of the founders of, and served as President for, the Tamil Film Producer Council.He served as President of the South Indian film chamber of commerce. He was Chairman of Film City, owned by the state government of Tamil Nadu. He was also Member of Award Films Committees and a Board Member of the Film Censor Board. His elder brother is Muktha Ramaswamy and his sister is Revathi. He married Prema in 1951. He has three children Muktha S. Sundar, Mukhta Ravi and Maya. He expired in his residence in T Nagar, Chennai on 29th May, 2018 due to old age. Mukha Srinivasan, Recipient of National Award for the film Mudalali, Best film 1977-78 Balaparitchai by Tamil Nadu state government, Best Science Fiction film Avan-Aval-Adhu State Award, Best film 1981-82 keezh vanam sivakkum' State Award and 1982-83 Paritchaikku Neramaachu - Tamil Nadu State film award for best director. Srinivasan was attracted to politics from the age of seven when he carried the flag of the Symbol of Congress and went to various places around his village. This was the first instance of him canvassing for Congress and his relatives asked him to concentrate on studies and stopped him from canvassing due to the age factor. After completing school he met Somu Rao who influenced him to follow the Communist ideology. He became close friends with Manali Kandasamy, Amirthalingam, Bala Dandayutham, and P. Ramamoorthy, which finally led him to meet Comarade Jeevanandham. They became close friends and together organised meetings in Tamil Nadu. It was at this time that the communist party was banned. Srinivasan, who at that time had been working in a government office at Selam in 1946, lost his job and was arrested. His brother Muktha Ramasamy, who was working with modern theatre, approached his boss and sought his help to release Srinivasan from jail. His films such as Mudalali, Naalu Veli Nilam & Thamarai kulam were influenced by the Communist ideology. When disputes started arising in the Communist Party he lost his interest. At this stage Srinivasan was an avid reader becoming inspired by Gandhian principles and he joined Congress in 1961. While working with Sivaji Ganesan he started organizing meetings. He canvassed for the 1962 elections and gave speeches supporting Congress under the leadership of K. Kamaraj. He used to follow "Mouna-Viradham". He would not speak and would have only water on holy days. In his early days he used to spin his own clothes with a Raatai chakkaram (Hand machine). When Gk Moopanar started the Tamil Maanila Congress in 1996 he appointed Srinivasan as General Secretary. Mr Gk Vasan later merged the Tamil Maanila Congress with the Indian National Congress. He is now working under the leadership of Mrs Sonia Gandhi. Srinivasan has held the positions of District Congress president, Vice-President Tamil Nadu Congress Committee (TNCC) and Gen-secretary Tamil Maanila Congress (Gk moopanar)...

andhima-Obituary

Mr. Kaduvetti Guru

25-May-2018

வன்னியர் சங்கத்தலைவரும், பாமகவின் முன்னணி தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான காடுவெட்டி ஜெ.குரு ( 57) காலமானார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சிகிச்சைபெற்று வந்தார். கடந்த சில நாட்களாக மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிக்சிசை பெற்று வந்தார்.  இந்நிலையில் இன்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தில் பிறந்த குரு, பாமக சார்பில் 2முறை எம்.எல்.ஏவாக இருந்துள்ளார். பாமக நிறுவனர் Dr.ராமதாஸ்: நான் பெற்றெடுக்காத எனது மூத்த பிள்ளையும், வன்னியர் சங்கத்தின் தலைவருமான குரு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியை கண்ணீருடன் பகிர்ந்து கொள்கிறேன். எனது வாழ்வில் எத்தனையோ இழப்புகளை நான் எதிர்கொண்டு இருக்கிறேன். அவை அத்தனையையும் தாண்டிய பெருஞ்சோகம் குருவின் மறைவு தான் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார், சமூக நீதிப் போராட்டத்தில் எனக்கு துணை நின்ற தளபதிகளில் முக்கியமானவர் குரு. அவரிடம் ஒரு பணியை ஒப்படைத்தால் அதை செய்து விட்டு தான் அடுத்த பணிக்கு செய்வார். எனக்கு அறிமுகமான நாளில் இருந்து கடைசி மூச்சு விடும் நாள் வரை எனது நம்பிக்கைக்குரிய தளபதியாக திகழ்ந்தவர் குரு. குருவுக்கும், எனக்கும் இடையிலான உறவு அரசியல் கட்சி நிறுவனருக்கும், தொண்டருக்கும் இடையிலானதாக ஒருபோதும் இருந்ததில்லை; மாறாக பாசமுள்ள தந்தைக்கும் விசுவாசமுள்ள மகனுக்கும் இடையிலான உன்னதமான உறவாகவே இருந்தது. குருவின் செயல்பாடுகள் குறித்து எனக்கு எப்போதுமே பெருமிதம் உண்டு. அரியலூர் மாவட்டத்தில் இரட்டைக்குவளை முறையை ஒழித்ததில் தொடங்கி என்னை அழைத்துச் சென்று ஒரே நாளில் 7 இடங்களில் அம்பேத்கர் சிலைகளை திறக்க வைத்தது, அப்பகுதி மக்களுக்கு எந்த சிக்கல் ஏற்பட்டாலும் உடனடியாக களமிறங்கி போராடுவது என பல்வேறு சாதனைகளுக்கு குரு சொந்தக்காரர் ஆவார். அவரது பெருமைகளை வெறும் வார்த்தைகளால் வர்ணித்துவிட முடியாது. அதற்கான தெம்பும், மனநிலையும் எனக்கு இல்லை. நான் கண்ணீரில் நனைந்து கொண்டிருக்கிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், வன்னியர் சங்கத்தினர் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் கட்டுப்படுத்த முடியாத கண்ணீருடன் தெரிவித்துக் கொள்கிறேன். ...

andhima-Obituary

Mr. Balakumaran

15-May-2018

Balakumaran, one of the leading writers and novelists of the century, was born on 5th July 1946 at Pazhamarneri  near Thirukkattupalli in Thanjavur District.After passing out of the high school, he qualified himself in shorthand and typewriting and started his career as a steno and then made his mark as an official in a tractor company. During this tenure only he started composing poems i.e., in 1969 and then turned his attention to writing short stories and it is an undisputable fact that with his short stories numbering more than a hundred established his name in the history of Tamil literature as a rising star in the literary horizon of TamilNadu. Further to his credit he has penned more than two hundred novels that hold up to mirror the social and sordid realities of life and appealing conditions of our society. It is no exaggeration to say that his works sell like hot cakes in the market.The following awards he has won bear eloquent testimony to his literary genius and it is in the fitness of things that he has got them in recognition of his contribution to Tamil Literature Irumbu Kuthiraikal , a novel won the award of Raja Sir Annamalai Chettiyar Endowment; another novel Mercury Pookkal  was given illakkiya chinthannai prize. Kadarpaalam , an anthology of short stories, won the second prize awarded by the state of the Tamilnadu. Suga Jeevanam , a novel, was given the first prize by the government of Tamilnadu.Coming to the themes he has dealt with in his writings, we have to say that he speaks of the family as the most important social institution and lays much stress on the place the women deserve to get in society. Further he goes on to emphasize the need for the self-awareness for which, he says, meditation, breathing exercises are much necessary. His works bring out the fact that the progress of an individual only is the progress of society and he preaches this philosophy in a simple style in his writings for a better understanding of the common man.Shakespeare says that great men have great mothers and this saying holds good in the case of our writer because he owns much to his mother for what he is today. His mother only brought him into touch with the ancient literature and imbued in him the taste for Tamil literature she cast him in the proper mould inculcating in him the values of the age old Tamil culture and the glories of the ancient Tamil Literature. Her experience as a teacher for about 36 years helped her to shape the growing mind and bring out the latent genius in him.He does not stop with writing mere stories but uses them as a good vehicle to propagate the greatness of the 18 sithars, Thevaram and Thiruvaasagam and the explanatory notes he introduces in the middle of the narration of the stories have a great impact on the minds of the readers in the sense that thy are induced to read all those religious pieces in all avidity. To add further he makes use of his experiences and knowledge of various fields of occupations in placing the events of the stories in this settings that help in understanding of the different fields of work.  Examples, logistics, vegetable market, airport, etc.They present vivid pictures of the life of the people dealt with exposing the darker side of society causing some social awakening.  Balakumaran’s genius ins manifold.  His forte is not just storytelling, it extends to the Tamil Cinema also. He has gone down in the history of the Tamil cinema as a great script writer and proved himself as a talented dialogue writer catering for the different tastes of the varied sections of the cinegoers.A special mention has to be made about his contribution to the cine field; he collaborated with director Balachandar who has scaled to the Himalayan heights in taking the Tamil cinema on its forward march, Sindhu bairavi, punnagai mannan  and kannad film  sundara choppanakalu  are the films he has done with Balachandar.The other films he is involved are: Nayakan, Guna, Shenbagathotam, Gentleman, Kaadhalan, Kilakkumalai, Maathankal elk, Ragasiyapolice, Baasha, Sivasakthi,Ullasaam, Velai, Jeans, Mugavari, uyirile kalandhu, Citizen, Majnu, Kaathal sadugudu, King, Manmathan, Kaalaba kaathalan, Pudupettai and Vallavan.Of these films Guna won the Cinema Express award. Gentleman and Kaathalan won the acclaim of the press for their dialogues and Kaathalan-state Award for excellent Script Writing. Chennai Lions Club awarded him an honourary title, Chinthanai Chemmal, Aanmeega Eluthulaga Vithakar  - Title was conferred by Jagathguru Sri Jayendra Swamigal.Though he has crossed 69 now, he is not tired of writing he continus to involve himself in his literary pursuits and contributes to the Tamil Cinema.He has brought out many works that deal with the exploits of Lord Krishna and his novel Thulasidas  gone down well with the readers as it pictures the leelas of krishna in a different manner. His greatest contribution is udayaar , a lengthy novel running into about 2650 pages, that brings out the achievements of Raja Raja Cholan  and the special features of the great Thanjavur temple. It has created history in the market as the best sellers as it brings the younger generation to know about the greatness of the chola period.He has scripted and written the scenario for mannar Basakar Sethupathi, a serial in a television channel.The gifted writer has been gifted with two wives, Kamala and Santha and children, one daughter named Sri Gowri and a Son, Venkataramanan. Sri Gowri did M.Sc Bio-Chemistry and after a short stint as a professor in a college got married to Chi.Ganesh. Now they are in Sharjah with their son Akash.Selvan Venkataramanan alias Surya after doing B.com and M.B.A served in Tata Consultancy Services as an administrative head for some time but his interest lay in arts and he felt that he was cut out for directing films only. So he quit that job and he is now getting apprenticed as an assistant director. He is recently married to sow.suganya.An another novel with four parts about King Rajendra Cholan, who won the entire east Asian countries like Burma , Bangkok and Malaysia. Again this is a hard case at the literary market.Sorkam Naduvilae, a novel, a deals with the world beyond death. It has been written in an unusual and a new angel. Paagasaalai , a good novel, speaks of the relationship between a guru and disiple who is separated from the parents and brought up by the guru only.Vetri vendumenil  is a simple treatise guiding the youngsters to shape themselves in nobler channels. Baghavaan Sri Ramana Magarishi , a biography of the great spiritual leader of Thiruvannamalai, was serialised in Anantha Vikatan; It was brought out in a book form afterwards and the reception was very warm.At present he has finished Sri Krishnaavathaaram  with the first part and the second part written fully, appears as a serial in Palsuvai.The latest of the list in Gankai Konda cholan about king Rajendra cholan.  Running into 2306 pages, it deals with the rule and achievements of Rajendra Cholan.A long nonfiction about his spiritual experiences with his guru Yogi Ramsurathkumar  of Thiruvannamalai  and his descriptive about Hindu Philosophy and its greatness which is ready to be published. This will make him much more popular with youngsters.reference: http://www.writerbalakumaran.com/aboutme/ ...

andhima-Obituary

Dr. Arivoli

08-May-2018

கடந்த 1936-ம் ஆண்டு ஜனவரி 21-ம் தேதி நாகப்பட்டினம் வட்டம் சிக்கல் கிராமத்தில் பிறந்தவர் அறிவொளி. கல்லூரி படிப்பை தஞ்சையில் முடித்தார். அதன் பிறகு  அரசு வேலை உட்பட பல்வேறு இடங்களில் ஆசிரியா் பணியாற்றியவர், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும், பூம்புகார் கல்லூரியிலும் பேராசிரியராக பணிபுரிந்தார். பணிக்குப் பிறகு திருச்சியில் குடிபெயர்ந்த அறிவொளி, வித்துவான் மற்றும் எம்.ஏ தமிழ் படித்திருந்தவர், இலக்கியக் கூட்டங்களில் பேச ஆரம்பித்தார். அடுத்து, பட்டிமன்றங்களில் பட்டையைக் கிளப்பினார். காரைக்குடி கம்பன் கழகத்தின்மூலம் தமிழுக்கு முக்கியப் பங்காற்றினார். குன்றக்குடி அடிகளார், அ.ச.ஞானசம்பந்தம் போன்ற புகழ்பெற்ற பட்டிமன்றப் பேச்சாளர்களுடன் பேசி தமிழுக்குப் பெருமை சேர்த்தவர்.  மேலும், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் படைப்புகள் உள்பட ஆயிரக்கணக்கான தலைப்புகளில் பட்டிமன்றங்களில் பேசியவர், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டிமன்ற நடுவராக விளங்கினார். 1986-ம் ஆண்டு, முதல்முறையாக வழக்காடு மன்றம் என்னும் அமைப்பை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியவர். இவரது திறமையைப் பாராட்டி ஆய்வுரை திலகர், கபிலவாணர் உள்ளிட்ட பல்வேறு விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன.  சமீபத்தில், வாழ்நாள் சாதனை விருது பெற்றார். இவரின் பேச்சுத் தமிழுக்கு தமிழகம், இந்தியா மட்டுமல்லாமல், அமெரிக்கா, கனடா, பாரிஸ், குவைத், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்பட பல்வேறு நாடுகளில் ரசிகர்கள் உண்டு. இலக்கிய மேடைகள் மட்டுமல்லாது, சினிமா, டி.வி சீரியல்களிலும் நடித்துள்ளார். தமிழிலில் பேசவது மட்டுமல்லாது தமிழில் எழுதுவதிலும் வல்லவரான  இவர், சுமார்        120-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். 1974-ம் ஆண்டு, 'பாரதிதாசனின் புதிய பார்வை' என்ற தலைப்பில் முதல் நூலை எழுதினார். சமீபத்தில் எழுதப்பட்ட 103-வது நூலின் பெயர், 'யோகக் களஞ்சியம்', 'சிவபுராணம் அனுபவ விளக்கம்' என்ற நூலும், கம்பராமாயணம் முழுவதையும் நாவல் வடிவில் ஆயிரத்து 200 பக்கங்களில் எழுதியுள்ளார். மேலும், மருத்துவத்தில் உள்ள ஆர்வம் காரணமாக சித்த வைத்தியம், அக்குபஞ்சா் போன்ற மருத்துவப் படிப்புகளையும் இந்தியாவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் படித்து முடித்துள்ளார். அக்குபஞ்சர் படிப்பில் டென்மார்க்கில் உள்ள பல்கலைகழகத்தில் பிஹெச்.டி முடித்துள்ளார். உலக நாடுகளுக்கு மாற்று மருத்துவத்தைக் கூறிய இவர், புற்றுநோய்க்கு தமிழ் மருத்துவத்திலும் தீர்வு கூறி பிரபலமடைந்தார்.  பட்டிமன்றப் பேச்சாளர் மட்டுமல்லாமல், இயற்கை வைத்திய முறையில் மக்களுக்கு சிகிச்சையும் அளித்துவந்தார்.  இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனா். உடல்நலக்குறைவால் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்த  அறிவொளி, சிகிச்சை பலனின்றி காலமானார்....

What We Provide

Get Obituary announcement in your area

How it Works